About Me

My photo
hi i am kumar. i want to share something i know. my blog mixed up with my lounguage tamil. i love my lounguage more then other. but i will post in english also. so be happy. every moment for us. keep enjoying.

Sunday, November 8, 2009

!!!"அலுத்துவிட்டதுதான் அயல்தேச வாழ்கை"!!!


!!!"அலுத்துவிட்டதுதான்
அயல்தேச வாழ்கை"!!!

அதிகாலை துயிலேளுந்து பாட்டி கையால் எண்ணெய் முளுக்காடி,

கம்பெனி பெயர் வெளியே தெரிய கவனமாய் தையிக்கப்பட்ட

புது துணி வாங்கியுடுதி,

அம்மா கையால் பச்ட்சனம் தின்று,

கையிலும் வெளியிலுமாய் வெடித்து கொண்டாட

தீபாவளி சந்தோசமிங்கில்லை.

பொங்கலுக்கு துணிஎடுக்க நல்லி இல்லை, குமரன் இல்லை, சரதாஸ் கூட இல்லை.

நீந்தி துள்ளைத்து நீராடிக்களிக்க ஆடிபெருக்கு காவிரியில்லை.

மடித்து கட்டின லுங்கியும், தலை மறைத்து கட்டின முண்டசுமாய் நெஞ்சோடு அணைத்த கூடை யிலிருந்து உரமெடுத்து வீசி தெள்ளிக்க,

பச்சை நெல்வயல்கள் இங்கு சாஸ்வதமகவில்லை.

வலக்கையில் டீ க்ளாசும்,

இடக்கையில் கிங் சைசும்,

சுற்றிலும் நட்பு வட்டமுமாய் ஹோவென்று கூவி,

அரட்டையடித்து குலாவ தெருமுக்கில் நாயர்கடை இல்லை.

பேரம் பேசி காய்கறி வாங்க சந்தையில்லை,

சுஜாதாவும், சுந்தர ராமசாமியும் படிக்க ஒரு புத்தக கடையுமில்லை,

வேலை பார்க்கும் பட்டணத்தில் வாங்கிய சம்பளத்தோடு வெள்ளி இரவு ஊர் சென்று திங்களில் திரும்பி வர தட தடக்கும் ரயிலுமில்லை,
அரசு போக்குவரத்து சாத்தியமே இல்லை.

சிகை கலைய பயணிக்கும் படிக்கட்டு பயணமில்லை,

சைகில் முதல் ஆட்டோ வரை பெருமை சொல்ல வகைகொன்றாய் வாகனமில்லை.

கழுத்து சுற்றிய துப்பட்டா, பட்டத்து வாலாய் பின்னால் பட படக்க,

குழல் பறக்க ஸ்கூட்டி ஓட்டும் கல்லுரி பெண்களெல்லாம் காட்சிக்கு கிடைக்கவேஇல்லை.

சிதைக்காது, பல்லுக்குள் நொருக்கதூ என் பெயரை உச்சரிக்கும் பிரகிருதி ஒன்றுகூட இங்கில்லை.

பெற்றோரை நினைத்த பொழுதில் சென்று பார்த்துவர,

தாவணிக்குள் நுழைந்த செல்ல தங்கையின் சிகை கலைத்து வாழ்த்து சொல்ல,

சொந்தங்களால் உற்சாகம் பெற, கொஞ்சமேனும் வழியே இல்லை.

மொத்தமாய் இழபென்ரும் சொல்லிவிடுவதர்கில்லை,

சனி கிழமை இரவுகளில் ஊருக்கு தொலைபேசி,

மனசுக்குள் முகமும், காதுக்குள் குரலுமுமாய், மணி கணக்காய் பேச முடிகிறதே.

இத்தனையும் இழந்து சேகரித்ததில் ஊரில் ஒரு வீடு மெய்பட்டது. வங்கி கையிருப்பு மெல்ல மெல்ல உயர்கிறது.


எத்தனை சொல்லி என்ன, என் போல் தவித்திருபோர் ஏராளம் உடனிருந்தும்,

எண்ணையில் நீராய், ஒட்டாமல் தனிக்கிறேன்.

"அலுத்துவிட்டதுதான் அயல்தேச வாழ்கை"!!!

No comments:

Post a Comment